மட்டமான அரசியலில் தேமுதிக

Webdunia
புதன், 6 மார்ச் 2019 (16:48 IST)
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேமுதிக - அதிமுக கூட்டணி இன்னும் முடிவாகமல் இழுபறியில் உள்ளது. இன்று தேமுதிகவின் சுதீஷ் பாஜக தேர்தல் பொருப்பாளர் பியுஸ் கோயல் ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. 
 
தேர்தலுக்கான கூட்டணியில் திமுக தங்களது நிலைபாட்டை தெளிவுபடுத்தியுள்ள நிலையில், தேமுதிகவின் சில செயல்களால்  அதிமுக இன்னும் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ முடிவுகளை வெளியிடாமல் தாமதப்படுத்தி வருகிறது. 
 
தேமுதிக தலைவர் விஜய்காந்த் உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகியுள்ளார், கட்சி பணிகளை அவரது மனைவி பிரேமலதாவும், சுதீஷூம் கவனித்து வருகின்றனர். இவர்கள் மேற்கொள்ளும் பல முடிவுகளால் தேமுதிக தொண்டர்களே அதிருப்தியில் உள்ளனர். 
அதிமுகவிடம் 7 தொகுதிகளை கேட்டது தேமுதிக இதற்கு அதிமுக தரப்பு சம்மதிக்காததால், இதனை பயன்படுத்திக்கொள்ள நினைத்த திமுக அவர்களுடன் கூட்டணி குறித்து பேசியது. அதுவும் ஒத்துவராத நிலையில் திமுக தேமுதிகவுடன் கூட்டணி இல்லை என முடிவு செய்து ஒதுங்கியது. 
 
இதன் பின்னரும் அதிமுக - தேமுதிக கூட்டணி தொகுதி பங்கீடுகள் இழுபறியிலேயே பல நாட்களுக்கு நீடித்தது. இன்று மோடி தமிழகம் வந்துள்ள நிலையில் தேமுதிகவின் கூட்டணி குறித்து முடிவு எடுத்துவிட வேண்டும் என அதிமுக உறுதியாக இருந்தது. 
ஆனால், இதற்கிடையில் தேமுதிகவின் முக்கிய தலைகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து துரைமுருகன், தேமுதிக தரப்பில் சுதீஷ் போன் செய்து, அதிமுக கூட்டணியில் இருந்து விலகி திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் திமுக வழங்குவதற்கு சீட் இல்லை என மறுத்துவிட்டாதாகவும் கூறினார். 
 
சுதீஷ் துரைமுருகன் கூறிய இந்த செய்தியை ஒப்புக்கொண்டார். அதேபோல் அதிமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை தொடரும் எனவும் தெரிவித்தார். இப்போது இருக்கும் சூழ்நிலையை பார்த்தால் அதிமுக - தேமுதிக கூட்டணி சாத்தியமில்லை என்றே தெரிகிறது. 
அதிமுக, திமுக என் மாற்றி மாற்றி கூட்டணி பேசி தேமுதிக நாகரீகமற்ற அரசியலை நடத்தி வருகிறது. இதில் 40 தொகுதிகளில் போட்டி என கட்சி உறுப்பினர்களிடம் விருப்பமனுவை வேறு பெற்றுள்ளது. 
 
விஜயகாந்த் சரியான உடல்நலத்துடன் இல்லாததால் கட்சி மட்டமான அரசியலில் ஈடுப்பட்டு வருவது அனைவரையும் குறிப்பாக அந்த கட்சி தொண்டர்களுக்கே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்