இந்த நிலையில், இந்தியா திடீரென தண்ணீர் பகிரும் ஒப்பந்தத்தை இடைக்காலமாக நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மீண்டும் ஒப்பந்தம் செயல்படுத்தப்படும் என்று கூறியதை அடுத்து, இந்தியா ஒரு மறைமுகமாக வாட்டர் போரை தொடங்கியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே உலகின் பல நிபுணர்கள், மூன்றாவது உலகப்போர் ஒருவேளை நடந்தால் அது தண்ணீருக்காக தான் நடைபெறும் என்றும், உலகளவில் தண்ணீரின் அளவு குறைந்து வருவதாகவும் கூறியிருந்தனர். அந்த வகையில், இந்தியா முதன்முதலாக வாட்டர் போரை ஆரம்பிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இந்த போர் உலகப்போராக நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.