ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

Siva

வியாழன், 24 ஏப்ரல் 2025 (17:56 IST)
இந்தியாவின் வலிமையான தொலைத்தொடர்பு துறையில் போட்டியிடும் முயற்சியை அதானி குழுமம் தற்போது ஓரங்கட்ட முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அதானியின் துணை நிறுவனம் Adani Data Networks, 26 GHz வரிசையில் உள்ள 400 MHz ஸ்பெக்ட்ரத்தை பாரதி ஏர்டெல் மற்றும் அதன் கிளையான பார்டி ஹெக்ஸகாமுக்கு விற்றுள்ளது.
 
2022ஆம் ஆண்டு நடைபெற்ற 5G ஏலத்தில் ரூ. 212 கோடி செலவில் ஸ்பெக்ட்ரம் பெற்ற அதானி குழுமம், தங்கள் துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற இடங்களில் தனிப்பட்ட 5G சேவையை பயன்படுத்த திட்டமிட்டிருந்தது.  
 
ஆனால் 5G தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் பணி சவாலானதாக இருந்து வந்தது. இதற்கு தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவம், சாதனங்கள், பராமரிப்பு உள்கட்டமைப்பு ஆகியவை அதானி குழுமத்திடம் இல்லை. மேலும், DoT விதிமுறையின்படி, ஒரு வருடத்திற்குள் வணிக சேவையை தொடங்க வேண்டும் என்ற அழுத்தமும் இருந்தது.
 
இதனை அடுத்து, ஸ்பெக்ட்ரத்தை பாரதி ஏர்டெல் நிறுவனத்திற்கு விற்று, தங்களின் முக்கியமான துறையான உள்கட்டமைப்பு, ஆற்றல் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஆகியவற்றில் மேலும் கவனம் செலுத்த அதானி குழுமம் முடிவெடுத்துள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்