மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகிய இருவரும் இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களை அவசரமாக சந்தித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பெஹல்காம் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களை மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் ஜெய்சங்கர் ஆகிய இருவரும் சந்தித்துள்ளனர்.
இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற இருக்கின்ற நிலையில், அது குறித்து ஜனாதிபதியிடம் இரு அமைச்சர்களும் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஜனாதிபதியிடம் இரு அமைச்சர்களும் ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது.