ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அச்சுறுத்தலான சூழ்நிலையில், 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததோடு, பலர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆனால், இந்தக் கொடூர சம்பவத்தின் மத்தியில், அஸ்ஸாம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பெங்காலி துறை இணை பேராசிரியர் தேவாஷீஷ் பட்டாச்சாரியா தன்னையும், தனது மனைவியையும், மகனையும் காப்பாற்றிய மறக்க முடியாத அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
“அந்த நேரத்தில், நான் குடும்பத்துடன் பைசரனாவின் புல்வெளியில் ஒரு மரத்தின் கீழ் தங்கியிருந்தேன். திடீரென எங்களிடம் வந்து கல்மா சொல்லுமாறு கேட்டனர். நான் பயத்தில், நானும் அதை சொல்ல ஆரம்பித்தேன். ஒருவன் என்னை கண்டித்து கேட்டபோதும், நான் உரக்க சொல்லிக்கொண்டே இருந்தேன்,” என அவர் தெரிவித்தார்.
அந்த பயங்கரவாதி என்னை முஸ்லீம் என நினைத்து என்னை விட்டுவிட்டான்; ஆனால் என் பக்கத்திலிருந்த ஒருவர் தாக்கப்பட்டார். அந்தக் கணத்தில், நாங்கள் வாய்ப்பு பார்த்து தப்பியோடினோம்,” என்று கூறியுள்ள தேவாஷீஷ், அந்த தருணங்கள் இன்னும் அவரை உலுக்கி வருவதாக சொல்கிறார். மேலும் கல்மா என்பது அனைத்து முஸ்லீம்களும் அறிந்திருக்கும் ஒரு அம்சமாகும்.