கூட்டணி விஷயத்தில் தேமுதிக மீது மோடி கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக ஏற்கனவே தனது கூட்டணிகளை உறுதி செய்திவிட்ட நிலையில், கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்க வேண்டிட கட்டாயத்தில் அதிமுக உள்ளது. அதிமுக தேமுதிக கூட்டணிதான் இழுபறியில் உள்ளது.
அதிமுக பொதுக்கூட்டத்தில் தேமுதிக கொடி மற்றும் புகைப்படம் இல்லாததால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் சற்று முன்னர் பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்தின் படமும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனின் படமும் வைக்கப்பட்டது. இதனால் தேமுதிக - அதிமுக கூட்டணி உறுதி என கூறப்பட்டு வந்தது. பின்னர் மீண்டும் விஜயகாந்தின் படம் நீக்கப்பட்டது.
இதற்கிடையே பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல், கூட்டணி தொடர்பாக தேமுதிக துணைச் செயலாளர் சுதீசிடம் பேசினார். பின்னர் பேசிய அவர் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறினார். அதே நேரத்தில் தேமுதிக மூத்த நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேசியது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விளக்கமளித்த துரைமுருகன், தேமுதிகவை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், தங்களிடம் சீட் இல்லை எனவும் கூறிவிட்டார்.
இதிலிருந்து தேமுதிக மிக மட்டமான அரசியல் செய்கிறது. வெறும் தொகுதிகளுக்காகவே இப்படி மாறி மாறி அரசியல் நாடகம் நடத்துகிறது எனவும் தேமுதிகவை போல அநாகரிகமான கட்சியை பார்த்ததில்லை எனவும் தேமுதிக மீதான மதிப்பும் மரியாதையும் டோட்டலாக டேமேஜாகிவிட்டது. பல அரசியல் விமர்சகர்களும் மக்களும் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே சென்னை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள மோடி தேமுதிக கூட்டணி இழுபறியால் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளாராம். வேண்டுமென்றால் தேமுதிகவை இணைத்துக்கொள்ளுங்கள் இல்லையேல் அவர்களை கழட்டிவிடுங்கள் என ஆவேசமாக கூறினாராம். இதனால் தேமுதிக செய்வதறியாமல் முழித்துக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.