நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக ஏற்கனவே தனது கூட்டணிகளை உறுதி செய்திவிட்ட நிலையில், கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்க வேண்டிட கட்டாயத்தில் அதிமுக உள்ளது. அதிமுக தேமுதிக கூட்டணிதான் இழுபறியில் உள்ளது.
அதிமுக சார்பில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் தேமுதிக கொடி மற்றும் புகைப்படம் இல்லாததால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் சற்று முன்னர் பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்தின் படமும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனின் படமும் வைக்கப்பட்டது. இதனால் தேமுதிக - அதிமுக கூட்டணி உறுதி என கூறப்பட்டு வந்தது.
இதற்கிடையே பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல், கூட்டணி தொடர்பாக தேமுதிக துணைச் செயலாளர் சுதீசிடம் பேசி வந்த அதே நேரத்தில் தேமுதிக மூத்த நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேசியது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விளக்கமளித்த துரைமுருகன், தேமுதிகவை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், தங்களிடம் சீட் இல்லை எனவும் கூறிவிட்டார்.