அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
அரியலூரை சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவரை மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மதுரை உயர்நீதிமன்றம் மாற்றியது
இந்த நிலையில் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் டிஜிபி மேல்முறையீடு செய்துள்ளார் இந்த மேல்முறையீடு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது