மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற அழகி தற்கொலை! – அமெரிக்காவில் அதிர்ச்சி!

திங்கள், 31 ஜனவரி 2022 (15:39 IST)
அமெரிக்காவில் மிஸ் அழகி பட்டம் வென்ற இளம்பெண் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் அமெரிக்கா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு அழகி பட்டம் வென்றவர் செஸ்லி க்ரிஸ்ட். செஸ்லி க்ரிஸ்ட் நியூயார்க் மாகாணத்தில் உள்ள 60 மாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் செஸ்லி க்ரிஸ்ட் 60 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 29வது மாடி வரை அவர் ஏறி சென்றது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. அதன்பிறகு எந்த கேமிராவிலும் அவர் பதிவாகததால் 29வது மாடியிலிருந்து அவர் குதித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொள்வதற்கு சில நிமிடங்கள் முன்னதாக இன்ஸ்டாகிராமில் “இந்த நாள் உங்களுக்கு ஓய்வையும் அமைதியையும் கொண்டுவரும்” என்று பதிவிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்