தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு! – சிபிஐ விசாரிக்க உத்தரவு!

திங்கள், 31 ஜனவரி 2022 (12:21 IST)
தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பள்ளியில் படித்து வந்த அரியலூரை சேர்ந்த +2 மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி லாவண்யா தற்கொலைக்கு அவரை மதமாற்றம் செய்ய முயற்சித்ததே காரணம் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அப்படியான எந்த வாக்குமூலமும் மாணவி அளிக்கவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என மாணவியின் தந்தை முருகானந்தம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்