தடுப்பூசி செலுத்தாத 3 ஆயிரம் ஊழியர்கள் டிஸ்மிஸ்?

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (18:14 IST)
தடுப்பூசி செலுத்தாத 3,000 ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
அமெரிக்காவில் ராணுவ வீரர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 3000 ராணுவ வீரர்கள் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாமல் இருப்பதால் அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
தடுப்பூசி செலுத்தி கொள்ளாத வீரர்களால் மற்ற வீரர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அதனால் தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ய பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் ராணுவ செயலாளர் தெரிவித்துள்ளார்
 
ராணுவ தலைமையகம் பெண்டகன் இது குறித்து கூறியபோது தடுப்பூசி செலுத்தாத வீரர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதில் ரிசர்வ் படையினர் பயிற்சி படையினர் வீரர்கள் என அனைவரும் பொருந்தும் என்றும் கூறியுள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்