திசை திரும்பியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (17:41 IST)
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு சற்றுமுன் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகிய நிலையில் தற்போது அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசை திரும்பியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிக்கோட்டா ஆகிய பகுதிகளுக்கு இடையே கடலூரில் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் கூறியது 
இந்த நிலையில் தற்போது வடக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இதன் காரணமாக சென்னைக்கு அதிக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் சென்னை மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்