மனித கழிவை மனிதர்களே அள்ளும் அவலம்! – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புதன், 10 நவம்பர் 2021 (14:54 IST)
தமிழகத்தில் மனித கழிவுகளை மனிதரே அள்ளுவதை முற்றிலும் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவதாக அளித்திருந்த வாக்குறுதிகளில் மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதை நிறுத்துவது, அதற்கு விஞ்ஞான முறைகளை பயன்படுத்துவதும் ஒன்றாகும். இந்நிலையில் இதுகுறித்த வழக்கு சபாய் கர்மாச்சோரி அந்தோலன் என்ற அமைப்பின் பேரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இன்று இந்த வழக்கில் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நடமுறையை ஒழிக்க தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்