மழை எதிரொலி: சென்னை விமானங்கள் ரத்து!

புதன், 10 நவம்பர் 2021 (15:38 IST)
மழை மற்றும் மேக மூட்டத்தால், மோசமான வானிலை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மேலும் சில நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு மற்றும்  வருகைக்கான 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை மற்றும் மேக மூட்டத்தால், மோசமான வானிலை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட விமான விவரம் பின்வருமாறு... 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்