இந்த தாக்குதலின் போது, கர்நாடகாவின் ஷிவமோகா பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் மற்றும் பல்லவி தம்பதியினர், அவர்களது மகனுடன் ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
பெஹல்காமில் நடந்த தாக்குதலில், பயங்கரவாதிகள் மஞ்சுநாத்தை அவரது மனைவி மற்றும் மகன் கண்முன்னே சுட்டுக் கொலை செய்தனர். இந்த சம்பவம் பல்லவி கூறியதாவது: " நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் பெஹல்காமில் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது என் கண்முன்னே என் கணவரை சுட்டு கொன்றனர். 4 பேர் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். என் கணவரை கொன்றதை போல என்னையும் கொன்றுவிடுங்கள் என்று சொல்லியிருந்தேன். அப்போது, உன்னை கொல்ல மாட்டேன், நடந்ததை உங்கள் பிரதமர் மோடியிடன் போய் சொல் என்று ஒரு பயங்கரவாதி தெரிவித்தார்." என்று கூறினார்.