காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. தேடுதல் வேட்டை தொடர்கிறது..!

Mahendran

புதன், 23 ஏப்ரல் 2025 (10:49 IST)
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி நாலாவில் நடந்த மறைமுக மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பார்க்கப்படுகிறது.
 
 ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் நேற்று  பயங்கரவாதிகள் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூட்டில் 2 வெளிநாட்டவர்களுடன் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் பலர் படுகாயமடைந்தனர்.
 
இந்த நிலையில் இன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றதாக தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்தின் சினர் கார்ப்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாரமுல்லாவில் நடந்து கொண்டிருக்கும் அதிரடி நடவடிக்கையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி தோல்வி அடைந்தது” என்று கூறியுள்ளது.
 
மேலும், பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்