கனமழை எதிரொலி: சென்னைக்கு வந்து செல்லும் 8 விமானங்கள் ரத்து.

புதன், 10 நவம்பர் 2021 (15:41 IST)
வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பல விமானங்கள் கடந்த இரண்டு நாட்களாக தாமதமாக கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக சென்னைக்கு வந்து செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது சென்னை - மதுரை, சென்னை - திருச்சி, சென்னை - மும்பை, சென்னை - சார்ஜா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பயணிகளுக்கு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
கன மழை தொடர்ந்தால் மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக விமான நிலைய வட்டாரங்கள் கூறுகின்றன
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்