கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் திடீர் ராஜினாமா! என்ன காரணம்?

Mahendran
புதன், 3 ஜூலை 2024 (17:32 IST)
கோவை மேயர் கல்பனா ஆனந்த் குமார் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த் சற்றுமுன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை உதவியாளர் மூலமாக வழங்கி உள்ளதாகவும் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
கல்பனா ஆனந்த் குமார் அவர்கள் மேயராக பொறுப்பேற்றது முதலே அவர் மீது பல்வேறு புகார்கள் இருந்ததாகவும், குறிப்பாக அவரது கணவர் ஆனந்த் குமாரின் தலையீடு அதிகமாக இருந்ததாகவும் கூறப்பட்டது.
 
 திமுக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் அவர் நம்பிக்கை பெறவில்லை என்றும் திமுக கவுன்சிலர்களெ அவ்வப்போது மேயருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும் கூறப்படுகிறது.
 
 கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் இவர்களில் 97 பேர் திமுகவினர் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் 3 பேர் என்ற நிலையில் கோவை மேயர் திடீரென ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்