விஷச்சாராய விவகாரத்தில் அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும்.. பிரேமலதா ஆவேசம்..!

Mahendran

வியாழன், 27 ஜூன் 2024 (12:36 IST)
விஷ சாராய சம்பவத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆவேசமாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
விஷ சாராயம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டாமா? நாளை ஆளுநரை சந்தித்து தேமுதிக சார்பில் மனு அளிக்க உள்ளோம். விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். அதிமுகவுக்கு விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை. 
 
எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச அனுமதிக்க வேண்டும்’ என்பது தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த கோரிக்கை. அப்போது திமுக எம்.பி.,க்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.
 
ஆனால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான அதிமுகவினர் பேசினால் தடுக்கிறார்கள். நாடாளுமன்றம் என்றால் ஒரு நீதி, சட்டப்பேரவை என்றால் ஒரு நீதியா? என- தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்