திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

Mahendran

வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (18:57 IST)
திருமணம் ஆகி பத்து மாதங்கள் கழித்து தான் குழந்தை பிறக்கும் என்றும், திருமணத்திற்கு முன்பு அல்லது திருமணம் செய்யும் நாளில் குழந்தை பிறக்க வேண்டும் என்றால், அது வேறு விதமாகத்தான் குழந்தை பிறக்கும் என்றும், முன்கூட்டியே காதல் செய்து கர்ப்பமானால் திருமண நாளில் குழந்தை பிறக்கும் என்றும் திமுக எம்பி கல்யாணசுந்தரம் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 சில நாட்களுக்கு முன்புதான் அமைச்சர் பொன்முடி, சைவம்-வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், அவரது கட்சிப் பதவி நீக்கப்பட்டது. இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திமுக மாநிலங்களவை எம்பி கல்யாணசுந்தரம், 'எல்லாவற்றிற்கும் அவசரப்படக்கூடாது. திருமணம் ஆகி பத்து மாதங்களுக்கு பின்னர்தான் குழந்தை பிறக்கும். 
 
திருமணத்திற்கு முன்பு அல்லது திருமணம் செய்யும் நாளில் குழந்தை பிறக்க வேண்டும் என்றால், அது வேறு விதமாகத்தான் குழந்தை பிறக்கும். முன்கூட்டியே காதல் செய்து கர்ப்பமானால், திருமண நாளில் குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கிறது,' என்று கூறினார்.
 
'அவசரப்பட்டு பேசுவது, கோபப்பட்டு பேசுவது இதை எல்லாம் பேசுவதால் நல்லது செய்ய வருபவர்களுக்கு ஆர்வம் குறைந்து விடும். மக்கள் தங்களுக்கு தேவையானதை செய்து கொடுங்கள் என்று கேட்க வேண்டுமே தவிர, விதண்டாவாதம் செய்யக்கூடாது,' என்று அவர் தெரிவித்தார்.
 
அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்