முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

Mahendran

வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (19:00 IST)
முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறை இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அப்படி எதுவும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது தெரிவித்தார்.
 
முதல்வர் மருந்தகத்தில் 206 வகையான ஜெனரிக் மருந்துகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், மேலும் சில மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார். 
 
மேலும், முதல்வர் மருந்தகத்தில் 75% மருந்துகள் விலை குறைவாக விற்பனை செய்யப்படுகின்றன என்றும், சில மருந்துகள் விற்பனை செய்ய கூட்டுறவுத்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார். முதல்வர் மருந்தகத்தில் போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளன என்றும் அவர் கூறினார்.
 
மேலும், ஆறு மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் சார்பாக தொடர்ந்து வைக்கிறோம் என்றும், இது குறித்து மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அரசு வாய்ப்பு வழங்கினால், நிச்சயம் தமிழ்நாட்டில் கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்