ராஜினாமா செய்கிறாரா நெல்லை மேயர்? திமுக கவுன்சிலர்கள் மத்தியில் பரபரப்பு..!

Siva

செவ்வாய், 2 ஜூலை 2024 (12:31 IST)
நெல்லை மேயர் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படும் நிலையில் திமுக கவுன்சிலர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக நெல்லை மேயருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வருவதாகவும் ஒவ்வொரு மாதமும் மாநகராட்சி கூட்டம் ஏற்பாடு செய்யும்போது திமுக கவுன்சிலர்கள் போதிய அளவில் கலந்து கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.
 
 இந்த நிலையில் திடீரென நெல்லை மேயர் சரவணன் சென்னை சென்றுள்ளதாகவும் அங்கு அவர் திமுக தலைமையிடம் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும் அதற்கான கடிதத்தை வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 இந்த தகவல் இன்னும் திமுக தலைமை தரப்பிலிருந்து உறுதி செய்யப்படாத நிலையில் சமூக வலைதளங்களில் மட்டும் இந்த தகவல் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
உண்மையிலேயே நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா செய்து விட்டாரா என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இதனால் நெல்லை திமுக கவுசர் அவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்