ஆரம்பத்தில் கேஎன் நேரு ஆதரவாளராக இருந்த செளந்திரபாண்டியன், அதன் பின்னர் அவரால் ஒதுக்கப்பட்டதாகவும் திருச்சி மாவட்டத்தில் குறிப்பாக லால்குடி பகுதியில் எந்த அரசு விழா நடந்தாலும் அவரை அழைப்பதில்லை என்றும் குற்றம் தாக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அதிருப்தி அடைந்த செளந்திரபாண்டியன், தனது சமூக வலைதளத்தில் தானே இறந்து விட்டதாக செய்த பதிவு பரபரப்பு ஏற்படுத்த நிலையில் தற்போது அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யப் போவதாக கூறப்படுகிறது.
இது குறித்து அமைச்சர் நேருவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது சௌந்தரபாண்டியனை அழைத்து நேற்றே பேசி விட்டேன் என்றும் இந்த பிரச்சனை முடிந்து விட்டது என்றும் அவர் கூறினார். ஆனால் அதே நேரத்தில் சௌந்தர பாண்டியன் எம் எல் ஏ ராஜினாமா செய்யப் போவதாக வெளியான தகவலுக்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார். ஒருவேளை செளந்திரபாண்டியன் ராஜினாமா செய்தால் தமிழகத்தில் இன்னொரு இடைத்தேர்தல் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.