சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக உருவாக இருக்கும் பரந்தூர் விமான நிலையம் அமைக்க அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இது குறித்து முக்கிய ஆலோசனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன
சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே பரந்தூர் என்ற இடத்தில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்க இருக்கும் நிலையில், பரந்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த விமான நிலையம் தங்களுக்கு தேவை இல்லை என்று போராட்டம் செய்து வருகின்றனர்
இது குறித்து ஏற்கனவே பல அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மாலை 6 மணிக்கு பரந்தூர் விமான நிலையம், சூதாட்ட தடை குறித்து ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது