அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

Mahendran

சனி, 17 மே 2025 (15:49 IST)
டாஸ்மாக் நிறுவனம் சம்பந்தமான ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் அமலாக்கத் துறை மேற்கொண்ட சோதனைகள் அரசியல்பூர்வமாகவும், அரசாங்க ஊழியர்களை துன்புறுத்தும் வகையிலும் நடைபெறுகிறதென மதுவிலக்கு மற்றும் வீட்டுவசதி அமைச்சர் சு.முத்துசாமி கண்டனம் தெரிவித்தார்.
 
சென்னையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகனின் வீடு உட்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. ஆனால், அதில் முறைகேடுகளுக்கான எந்தவித ஆதாரமும் தற்போது இல்லை. கடந்த மாதம் டாஸ்மாக் தலைமையகத்தில் நடைபெற்ற சோதனைகள், தமிழக அரசின் முன் ஆட்சி காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அரசியல் நோக்கத்துடன் மீண்டும் விசாரணை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
 
அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கை முழுமையாக கற்பனை படைப்பாகும் என்றும், அதற்காக டாஸ்மாக் அலுவலர்களை தொடர்ந்து தொல்லைப்படுத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார். நேற்று நிர்வாக இயக்குநர் மற்றும் சிலர் வீட்டில் கூட சோதனைகள் நடந்தன.
 
இவ்வாறு ஆதாரம் இல்லாமல் அரசு ஊழியர்களை துன்புறுத்துவது, உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி நடக்கும் அரசியல் பழிவாங்கலாகும் என அமைச்சர் சு.முத்துசாமி கண்டனம் தெரிவித்ததோடு, இதற்குதேவையான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்