CUET PG தேர்வு: ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு!

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (09:09 IST)
CUET PG தேர்வுகளை எழுத விண்ணப்பித்த மாணவர்கள் ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
CUET PG தேர்வு நடைபெறும் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் http://cuet.nta.nic.in  என்ற இணையதளத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 தமிழ் ஆங்கிலம் உள்பட 13 மொழிகளில் இந்த தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை ஏற்பாடு செய்துள்ளது என்பதும் இந்த தேர்வு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற உள்ளன என்பதும் தேர்வு நடைபெறும் நகரங்கள் மற்றும் ஹால் டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த தேர்வை எழுதுவதற்கு 3.57 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், இந்த தேர்வு சுமார் 500 இந்திய நகரங்களில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்