மோட்டார் வாகன உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள ராயல் என்ஃபீல்டு, தனது முதல் மின்சார பைக்கான 'ஃப்ளையிங் ஃப்லி (Fling Flea) என்ற மாடலை பெங்களூருவில் அறிமுகம் செய்துள்ளது. சிட்டி பிளஸ் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த பைக், நகரங்களில் பயணிக்க ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மாடல், முன்னேற்றமடைந்த தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியத்தின் கலவையாக உருவாகியுள்ளது. FF.C6 எனப்படும் இந்த பைக், ரெட்ரோ ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பைக் முன்புறம் கிர்டர் ஃபோர்க் சஸ்பென்ஷன், துல்லியமான அலுமினியம் பொருட்கள், சிறப்பான மட்கார்டு ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் வாகனத்தின் கையாளும் வசதியும், திடத்தன்மையும் அதிகரிக்கிறது.
விற்பனை மற்றும் விலை பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரம்பரியம் மற்றும் புதிய டெக் அம்சங்களை இணைத்த இந்த மின்பைக், இளம் தலைமுறையை ஈர்க்கும் வகையில் தயாராகியுள்ளது.