தேவேந்திர் சிங் திலோன் என்ற 25 வயது மாணவர், பாட்டியாலாவில் உள்ள கால்சா கல்லூரியில் அரசியல் அறிவியல் படித்து வருகிறார். அவர் தனது முகநூல் பக்கத்தில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் படங்களை பகிர்ந்ததற்காக போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த ஆண்டு நவம்பரில் கர்தார்புர் வழியாக பாகிஸ்தான் சென்று, அங்கே உள்ள புலனாய்வு அமைப்புடன் தொடர்பு கொண்டு ரகசிய தகவல்களை பரிமாறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான் உளவுப் பிரிவு அவருக்கு பணம் வழங்கியதாகவும், அதற்கு பதிலாக இந்திய ராணுவ தளங்களின் புகைப்படங்களை பாகிஸ்தான் அதிகாரிகளுடன் அவர் பகிர்ந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அவருடைய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.