மாமன்னன் படப்பிடிப்பு தளத்தின் ‘லேட்டஸ்ட்’ புகைப்படத்தை வெளியிட்ட உதயநிதி!

ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (08:46 IST)
மாமன்னன் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடந்து வருகிறது.

இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பில் வடிவேலு சம்மந்தப்பட்ட காட்சிகள் பெருமளவில் படமாக்கப்பட்டுள்ளன.

சில மாதங்களுக்கு மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. படத்தைப் பற்றிய ஒரு முக்கியமான தகவல் சமீபத்தில் வெளியானது. படத்தில் மாமன்னன் என்ற டைட்டில் ரோலில் வடிவேலு நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவரின் மகனாகதான் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறாராம்.

இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் உதயநிதி துப்பாக்கியை மாரி செல்வராஜ் நோக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்