இந்தியாவின் சிறந்த ரேடார் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றுகிறார்கள்: சென்னை வானிலை மையம்

Webdunia
ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (07:16 IST)
இந்தியாவின் மிகச்சிறந்த ரேடார் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பணிபுரிகிறார்கள் என்றும் எனவே  தவறான விமர்சனங்கள் செய்ய வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்பட சில அமைச்சர்கள் வானிலை ஆய்வு மையம் சரியான முன்னெச்சரிக்கை அறிக்கையை வெளியிடவில்லை என்றும் அதனால் மீட்பு பணியில்  தாமதம் ஏற்பட்டது என்றும் கூறியுள்ளனர். இதற்கு பதில் அளித்துள்ள வானிலை ஆய்வு மையம்  தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை வானிலையை கண்காணிக்க டாப்ளர் ரேடார்கள். சென்னை வானிலை ஆய்வு மையம் நவீனமாக இல்லாமல் இருப்பதாக தவறான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். தென் கண்காணிக்க 3 டாப்ளர் ரேடார்கள் பயன்பாட்டில் உள்ளன. உலக வானிலை அமைப்பு இந்திய வானிலை ஆய்வு துறையின் கட்டமைப்பு, முன்னெச்சரிக்கைகளை உலகத்தரம் வாய்ந்தது

என பாராட்டியுள்ளது. வர்தா, கஜா, நிவர், மாண்டோஸ், மிச்சாங் புயல்கள் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது

இந்தியாவின் சிறந்த ரேடார் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார்கள்.

சென்னை வானிலை மையத்தை இலக்காக வைத்து செய்யப்படும் விமர்சனங்கள் அர்ப்பணிப்போடு இயங்கும் பணியாளர்களை புண்படுத்துகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்