சமீபத்தில் தென்மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு துரிதமாக உதவி மேற்கொண்டது.
இந்த நிலையில், மாணவ, மாணவிகள் கட்டணமின்றி சான்றிதழ்கள் பெறலாம் என உயர்கல்வித்துறை இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளுவர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் புயல் பாதிப்பால் இழந்த சான்றிதழ்களை mycertificates.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது.