வானிலை ஆய்வில் துல்லியம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ரமணன் பேட்டி

சனி, 23 டிசம்பர் 2023 (17:18 IST)
வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கணித்து தகவல் கூறவில்லை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் குற்றச்சாட்டில் இருந்த நிலையில் வானிலை ஆய்வில் துல்லியம் என்ற பேச்சுக்கு இடமில்லை என முன்னாள் வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.

வானிலை ஆய்வு பொருத்த வரை துல்லியம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் ஏனெனில் வானிலை என்பது தினம் தினம் அல்ல, நொடிக்கு நொடி மாறக்கூடியது என்றும் சில தரவுகள் முன் அனுபவங்கள் மூலம் மட்டுமே கணிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கிளைமேட் பாடல்கள் இருக்கின்றன என்றும் இவற்றை நாம் பிரதானமாக பின்பற்றுவது அமெரிக்க கிளைமேட் மாடல் என்றும் ஐரோப்பிய கிளைமேட் மாடல்களையும் பின்பற்றுகிறோம் என்றும் தெரிவித்தார்.

ஆனால் இந்த கிளைமேட் மாடல்கள் சொல்லும் தகவல்களை அப்படியே நம்ப முடியாது என்றும் அந்த தகவல்களோடு இஸ்ரோ தரும் தகவல்களையும் ஒப்பிட்டு சிலவற்றை துணிச்சலாக நிராகரித்து சிலவற்றை சொல்வது தான் வானிலை முன்னறிவிப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்