கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சென்னையில் இருந்து சிறப்பு வந்தே பாரத் ரயில்.. எந்த நகருக்கு?

சனி, 23 டிசம்பர் 2023 (16:32 IST)
கிறிஸ்மஸ் விடுமுறையை ஒட்டி ஏராளமானோர் சொந்த ஊர் செல்ல இருப்பதால் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்ற செய்திகளை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோழிக்கோடு வரை சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

டிசம்பர் 25ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் அதிகாலை நான்கு முப்பது மணிக்கு புறப்பட்டு  பெரம்பூர், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வருகிற 25-ம் தேதி நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்பவர்கள் இந்த இரண்டு சிறப்பு ரயில்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்