வேலை நிறுத்த போராட்டம் பண்டிகை காலத்தில் தேவையா..? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Mahendran
புதன், 10 ஜனவரி 2024 (11:32 IST)
வேலை நிறுத்த போராட்டம் பண்டிகை காலத்தில் தேவையா என்றும்  பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படும் நேரத்தில் வேலை நிறுத்தம் செய்வது சரியில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வரும் நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. 
 
இந்த விசாரணையின் போது பொங்கல் பண்டிகையின் போது வேலை  நிறுத்த போராட்டம் போக்குவரத்து தொழிலாளர்கள் செய்வது தேவையா என்ற கேள்வி எழுப்பிய நீதிபதிகள் பண்டிகை காலத்தில் மக்களுக்கு ஏன் இந்த இடையூறு என்றும் கேள்வி எழுப்பினார்.
 
நகரத்தில் உள்ள மக்கள் அதிக பாதிக்கப்படவில்லை என்றாலும் கிராமத்திற்கு செல்லக்கூடிய மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் என்றும் போராட்டம் நடத்த உரிமை இல்லை என்ற கூறவில்லை, ஆனால் தற்போதைய பண்டிகை நேரத்தில் இந்த போராட்டத்தை நடத்துவது முறையற்றது என்று தான் கூறுகிறோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்