பொங்கல் பண்டிகைக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக படங்கள் எவை? வெளியான தகவல்!

vinoth

புதன், 10 ஜனவரி 2024 (09:10 IST)
வரும் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து தொடர்ந்தார் போல விடுமுறை வருவதால் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு கிளம்ப திட்டமிட்டு வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் அயலான், கேப்டன் மில்லர் மற்றும் மிஷன் 1 ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இந்நிலையில் பொங்கல் சிறப்பு திரைப்படங்களை முன்னணி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்ய உள்ளன.

அதுபற்றி வெளியாகியுள்ள தகவலின் படி சன் தொலைக்காட்சியில் லியோ மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய திரைப்படங்களும்,  ஜி தமிழில் மார்க் ஆண்டனி, வீரன் மற்றும் ஜவான் ஆகிய திரைப்படங்களும், கலைஞர் தொலைக்காட்சியில் இறைவன் மற்றும் கழுவேர்த்தி மூர்க்கன் ஆகிய படங்களும், விஜய் தொலைக்காட்சியில் பரம்பொருள் மற்றும் லக்கிமேன் ஆகிய திரைப்படங்களும் ஒளிபரப்பப்பட உள்ளன.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்