கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவம்.. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த ஐகோர்ட்..!

Mahendran
திங்கள், 1 ஜூலை 2024 (11:40 IST)
சமீபத்தில் கள்ளக்குறிச்சியை நிகழ்த்த கள்ளச்சாராயம் மரணங்கள் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்ததால் 60க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண சம்பவத்தை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. கல்வராயன் மலைப்பகுதி மக்களின் பொருளாதார சமூக மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது’

மேலும் இந்த வழக்கின் எதிர்மனுதாரர்களாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மத்திய மாநில பழங்குடியினர் நலத்துறை மற்றும் டிஜிபி சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்