ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

Siva

ஞாயிறு, 30 ஜூன் 2024 (11:54 IST)
ஆளுங்கட்சியினர் துணையோடு தான் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றச்சாட்டு கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளச்சாராயம் குடித்ததால் 60க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் சிபிசிஐடி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கள்ளக்குறிச்சி காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம் .

இந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதுகுறித்து பேசிய போது கள்ளச்சாராயத்தால் தமிழ்நாட்டில் இனி ஒரு மரணம் கூட நிகழக்கூடாது என்றும் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் மீதும் புதிய சட்டம் பாயுமா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் கள்ளச்சாராயத்தால் கடந்த ஆண்டு 22 பேர் உயிரிழந்த போதே அரசு விழித்துக் கொண்டிருக்க வேண்டும் கல்வராயன் மலையில் ஆளுங்கட்சி துணையோடு தான் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்