இனிமேல் கள்ளச்சாராய உயிர் பலி நடந்தால் மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பு: முதல்வர் ஸ்டாலின்

Mahendran

சனி, 29 ஜூன் 2024 (15:57 IST)
இனிமேல் கள்ளச்சாராயத்தால் உயிர் பலி ஏற்பட்டால் அதற்கு மாவட்ட காவல் துறை அதிகாரிகள் தான் பொறுப்பு என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசிய போது இனிமேல் எங்கேயாவது கள்ளச்சாராய உயிர் பலி நடக்குமானால் அதற்கு அந்த மாவட்ட காவல்துறை அதிகாரியும் அந்த எல்லைக்கு உட்பட்ட காவல் நிலைய அதிகாரியும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார் 
 
கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பிறகு ஆட்சியர்கள் எஸ்பிக்கள் ஆய்வுக்கூட்டத்தில் இது குறித்து கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் இதேபோன்று இனி ஒரு சம்பவம் நடக்க கூடாது என்பதில் தமிழக அரசு மிகவும் கவனமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்