சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை டீனுக்கு கொரோனா தொற்று உள்ளதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முக்கியமாக சென்னையில் கொரோனா பாதிப்புகள் மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிகமாக உள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை உள்ளிட்டவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணி புரியும் செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் உட்பட இதுவரை 65 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டீன் ஜெயந்தி மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இதனால் அவருக்கு கொரோனா பாதிப்புகள் இருக்கலாம் என பேசிக்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் அவர் விட்டு சென்ற பொறுப்பை மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபுவே நேரடியாக ஏற்க உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.