கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதா பதஞ்சலி? பரபரப்பு தகவல்

ஞாயிறு, 14 ஜூன் 2020 (08:16 IST)
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதா பதஞ்சலி?
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்க உலக விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டும் வருகின்றனர். ஒரு சில நாடுகள் கொரோனாவுக்கான மருந்தை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்த போதிலும் உலக சுகாதார மையம் இதுவரை எந்த மருந்தையும் கொரோனா வைரஸை குணப்படுத்தும் மருந்து என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்தியாவில் ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருக்கும் பதஞ்சலி நிறுவனம் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக அறிவித்து உள்ளது. தாங்கள் கண்டுபிடித்த மருந்தை கொரோனா நோயாளிகள் உட்கொண்டதாகவும் அவர்கள் 5 முதல் 14 நாட்களில் குணம் அடைந்ததாகவும் பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது 
 
கொரோனா நோயாளிகளை குணப்படுத்த ஆயுர்வேத மருத்துவம் மிகச்சிறந்தது என்றும் இதற்கான ஆதாரங்களை அடுத்த சில நாட்களில் வெளியிடுவோம் என்றும் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.  ஏற்கனவே ஆயுர்வேதம் மூலம் கொரோனாவை குணப்படுத்தலாம் என்று பலர் கூறி வரும் நிலையில் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும் அதனை ஆதாரமாக இன்னும் ஒரு சில நாட்களில் நிரூபிக்க இருப்பதாகவும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்