5 வது கட்ட கொரோனா நிவாரண உதவி இன்று 415 குடும்பத்திற்கு வழங்கப்பட்டது...

சனி, 13 ஜூன் 2020 (22:41 IST)
வரவணை ஊராட்சியில் 5 வது கட்ட கொரோனா நிவாரண உதவி இன்று 415 குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. 
 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற  தொகுதிக்குட்பட்ட, கடவூர் வட்டம், வரவணை  ஊராட்சியில் ஏற்கனவே 1150 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  அதன் தொடர்ச்சியாக மேலும் 415 குடும்பங்களுக்கு  அரிசி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வரவணை ஊராட்சி மன்ற தலைவரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான கந்தசாமி தலைமை வகித்தார். கடவூர் தாசில்தார் திருமதி மைதிலி அவர்கள்,  வருவாய் ஆய்வாளர், மைலம்பட்டி திரு.பாலச்சந்திரன்,  கிராம நிர்வாக அலுவலர் திரு.ரஞ்சித் குமார், வரவனை ஊராட்சி செயலாளர் வீராசாமி அவர்கள் முன்னிலை வகித்தனர்.  பசுமைக்குடி தன்னார்வலர்கள் இர. வேல்முருகன், த.காளிமுத்து, கா.கவினேசன், ல.கார்த்திகேயன் அவர்களால் வழங்கப்பட்டது.

 பொற்செழியன் ராமசாமி, ஸ்ரீகாந்த் மாரிக்கண்ணு, மோகன் ரேணுகானந்தன், விராக் காம்ப்ளே, பரம்ஜித் மாகே மற்றும் பசுமைக்குடி நரேந்திரன் கந்தசாமி ஆகியோர் இணைந்து இந்த உதவிகளை வழங்கினர். 

சமூக விலகல் முறையாக கடைபிடிக்க பட்டது.

வரவணை ஊராட்சிக்கு உட்பட்ட சுண்டுக்குழிப்பட்டி மற்றும் வரவணை   ஆகிய ஊர்களில்  இன்று வழங்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த வ.வேப்பங்குடி பசுமைக்குடி இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியினை சமர்ப்பிப்பதாக அமெரிக்காவில் பணியாற்றும் வ.வேப்பங்குடியினை சார்ந்த பசுமைக்குடி ஒருங்கிணைப்பாளர் நரேந்திரன் கந்தசாமி செல்பேசி மூலமாக நன்றியினை தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், 5 வது  கட்டமாக இதுவரை நிவாரண உதவி வழங்கி  இருப்பதாகவும், இந்நேரத்தில் பசுமைக்குடி தன்னார்வலர்கள் திரு.பி.முருகேசன், திரு.பி.கருணாநிதி, பி. தங்கவேல்,  இரா. பாலகிருஷ்ணன் , பொ. ஈஸ்வரன், து. வெற்றிவேல், கோ. தங்கவேல், தொழிலதிபர் திரு.நவநீதன் , பொ. சந்தானகுமார், இரா. மகாமுனி, இரா. மணிவேல், லட்சுமி, இர. அன்புமணி, ரதிப்ரியா  ஆகியோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். 

பசுமைக்குடி இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியினை சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இதற்கான பொருட்கள் வாங்க உதவிய காவல்துறையை சேர்ந்த சுந்தரி, கஜேந்திரன் ஆகியோருக்கும் நன்றியையும்  பசுமைக்குடி தன்னார்வலர்கள் தெரிவித்துக்கொண்டனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்