வங்கக் கடலில் டிசம்பர் 1ம் தேதி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்று உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 29ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்றும், எனவே இன்று முதல் கடல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து, டிசம்பர் 1ம் தேதி மணிக்கு 90 கி.மீ. வேகத்தை எட்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் நவம்பர் 29ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகம் வரை சூறைக்காற்று வீசும் என்றும் எனவே இன்று முதல் 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, திருவண்னாமலை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.