போதை ஊசி செலுத்திக் கொண்ட மாணவன் உயிரிழப்பு

திங்கள், 27 நவம்பர் 2023 (19:15 IST)
சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை சேர்ந்தவர் ராகுல். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பிஏ.வரலாறு துறையில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
 
இந்த  நிலையில்  நேற்று முன்தினம் அண்ணா சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் தன் நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
 
அப்போது திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் அவரை மீட்டு அருகில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
 
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து  வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்