பாத்ரூமில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 15 வயது சிறுவன்: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2023 (09:40 IST)
பாத்ரூமில் இளம் பெண் குளிப்பதை தனது செல்போனில் 15 வயது சிறுவன் வீடியோ எடுத்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம் பெண் ஒருவர் ஐடி நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். இவர் நேற்று காலை தனது வீட்டு பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டில் வசித்த 15 வயது சிறுவன் ஜன்னல் வழியாக இளம் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். 
 
இதை தற்செயலாக கண்ட அந்த பெண் அதிர்ச்சியில் சத்தம் போடவே அந்த சிறுவன் அங்கிருந்து ஓடியதாக தெரிகிறது. இதனை அடுத்து இளம் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுவனை காவல்துறையினர் கைது செய்து சிறுவனிடம் இருந்த மொபைல் போனையும் கைப்பற்றி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்