சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் தென்னிந்தியாவில் முக்கிய ரயில் நிலையமாக உள்ளது. நாள்தோறும், பல ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் பயணிகள் இங்கிருந்து வெளியூர் செல்வதும், வெளியூரில் இருந்து இங்கு வருவதுமாக ரயில்போக்குவரத்தில் பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது இளம் பெண் ஒருவர் தவறி விழுந்தார். ரயிலில் சிறிது தூரம் இழுத்துச் சென்ற நிலையில் ரயில் நின்றதால் அருகில் நின்றிருந்த நபர் விரைந்து சென்று அப்பெண்ணை மீட்டார்.