பாஜகவுக்கு ஓட்டு முக்கியமே தவிர மனிதர்கள் முக்கியமல்ல- ம.நீ,ம பொதுச்செயலாளர் அருணாச்சலம்

ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (14:27 IST)
மக்கள் நீதி மய்யம் சார்பில் மணிப்பூர் வன்முறையை எதிர்த்து சென்னை உள்பட 8 மாவட்டங்களில் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் இரு பிரிவினருக்கு இடையே வன்முறை வெடித்த நிலையில், அங்குள்ள பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணமாக இழுத்து சென்ற வீடியோ பரவலானது.

இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டம் தெரிவித்த நிலையில், இதுதொடர்பாக  7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில்,  நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மணிப்பூர் வன்முறையை எதிர்த்து சென்னை உள்பட 8 மாவட்டங்களில் கண்டன ஆர்பார்ட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் கண்டன் ஆர்பாட்டத்தில் மநீம பொதுச்செயலாளார் அர்ணாச்சலம் பேட்டியளித்தார்.

‘’பாஜக அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. மணிப்பூரில் அவல நிலையைப் பார்க்கும்போது நாம் சுதந்திர இந்தியாவில்தான் இருக்கிறோமா என்ற எண்ணம் வருகிறது. பாஜகவுக்கு ஓட்டு முக்கியமே தவிர மனிதர்கள் முக்கியமல்ல… கட்சித் தலைவர் கமல்ஹாசன் மணிப்பூர் செல்வதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது’’ என்று  கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்