மெர்சல் சர்ச்சை ; தியேட்டர்கள் முன்பு போராட்டம் - அர்ஜூன் சம்பத் அறிவிப்பு

Webdunia
சனி, 28 அக்டோபர் 2017 (15:05 IST)
தமிழகம் முழுவதும் மெர்சல் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முன்பு நாளை அறப்போராட்டம் நடத்தப்படும் என மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.


 

 
திருநெல்வேலில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:


 

 
மெர்சல் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அப்படத்தில் மத உணர்வுகளை தூண்டும் விதத்திலும் விஜய் பேசியுள்ளார். இதை அவர் உள்நோக்கத்துடன் பேசியதாகவே நாங்கள் கருதுகிறோம். உடனடியாக அந்த வசனத்தை படத்தில் இருந்து நீக்க வேண்டும். இல்லையெனில், நாளை தமிழகம் முழுவதும் மெர்சல் திரைப்படம் ஓடும் திரையரங்குகள் முன்பு அறப்போராட்டம் நடத்துவோம்” என எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்