'மெர்சல்' நல்ல படம் என்று சொல்ல முடியாது: நீதிபதிகள் கருத்து
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (12:48 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தின் சென்சார் சான்றிதழை திரும்ப பெற வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடந்தது. இந்த வழக்கை விசாரணை செய்ய எந்தவித முகாந்திரமும் இல்லை என்று கூறி நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இந்த நிலையில் இந்த படம் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், 'மெர்சல்' நல்ல படம் என்று சொல்லும் அளவிற்கு இல்லை. எனினும் இதுபோன்ற விமர்சனங்களால் படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கின்றது என்று கூறினர்.
மேலும் இந்தியாவில் எத்தனையோ பிரச்சனை இருக்கும்போது ஒரு திரைப்படத்தை எதிர்த்து வழக்கு போடுவது சரியா? திரைப்படத்தை திரைப்படமாக மட்டும் பார்க்கவும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
'மெர்சல்' நல்ல படம் இல்லை என்று நீதிபதிகள் கூறியதை வைத்து அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர்.