நவம்பர் 7ல் தீர்ப்பு, நவம்பர் 6ல் போராட்டம்: திமுகவின் கணக்கு என்ன?

சனி, 28 அக்டோபர் 2017 (14:05 IST)
ரேசன் கடைகளில் சர்க்கரையின் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்  நவம்பர் 6ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.



 
 
இன்று உயர்த்தப்பட்ட விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க நாளையே போராட்டம் நடத்தாமல் நவம்பர் 6ஆம் தேதி வரை காலந்தாழ்த்துவது ஏன்? என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
 
இந்த நிலையில் அரசியல் விமர்சகர் ஒருவர் இதுகுறித்து கருத்து தெரிவித்தபோது, 'நவம்பர் 7ஆம் தேதி 2ஜி வழக்கின் தீர்ப்பு வரவுள்ளதால் நவம்பர் 6ஆம் தேதியை திமுக போராட்ட தினமாக வைத்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்.  ரூ.12 மட்டுமே சர்க்கரையில் விலை உயர்ந்துள்ளதை எந்த பொதுமக்களும் கண்டுகொள்ளவில்லை என்றும் அரசியல் கட்சிகள் மட்டுமே இதை பெரிதுபடுத்துவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்