180 ரூபாய் கொடுத்து உங்கள் யாரு படம் பார்க்க சொன்னது? சந்திரசேகர் கேள்வி
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (18:25 IST)
அதிக ரூபாய் டிக்கெட் எடுத்து அவங்கள யாரு வந்து படம் பார்க்க கட்டாயப்படுத்தினது என விஜய்யின் அப்பா எஸ்.எ.சந்திரசேகர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் வெளிவந்த விஜய்யின் மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தவறான கருத்தை விஜய் கூறியதாக பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய எஸ்.எ.சந்திரசேகர் கூறியதாவது:-
சினிமாவில் இதெல்லாம் கற்பனையாக சொல்லப்படுவது, அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதிக ரூபாய் கொடுத்து படம் பார்க்க வாங்க என்று நாங்க யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றார்.
இவரின் இந்த பதில்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் இதற்கு பெரிய விவாதமே நடைபெற்றது. விஅய் ரசிகர்கள் சிலர் எஸ்.எ.சந்திஎரசேகரின் பேட்டியை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.